செயலிழந்த நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கி மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளதாக மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.
விரைவில் குறித்த மின்பிறப்பாக்கியை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கவுள்ளதாக அவர் கூறினார்.
நேற்றிரவு லக்ஷபான மின் நிலையத்தை மின்னல் தாக்கியதையடுத்து, மின்பிறப்பாக்கக் கட்டமைப்பில்
கோளாறு ஏற்பட்டு நுரைச்சோலை மின் நிலையத்தின் இரண்டாவது கட்டம் செயலிழந்தது.
அதனையடுத்து தெற்கு, சப்ரகமுவ உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.