முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் அனுமதியுடன் அவரின் ஆலோசனைக்கேற்ப, முன்னாள் இராணுவ அதிகாரியொருவரே ஆவா அமைப்பை உருவாக்கியதாக இணை அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
குறித்த இராணுவ அதிகாரி தமது நண்பர் எனவும் அன்று ஆவா குழு வடக்கை சீர்குலைக்கும் நோக்கில் செயற்பட்டதாகவும் ராஜித்த சேனாரத்ன மேலும் குறிப்பிட்டார்.
குறித்த அதிகாரிகளே ஆவா குழுவின் உறுப்பினர்களுக்கு வசதிகளை செய்து கொடுத்ததாகவும் அவர்கள் இன்றும் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கில் செயற்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.