நுகேகொட பகுதியிலுள்ள தங்க நகை விற்பனை நிலையத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரால் ஒரு கோடியே 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பேருவளை பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞர் ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.