உலகில் 190 ற்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. பெரும்பாலான நாடுகளில் அரசின் தலைவர்களாக அதிபர், பிரதமர் உள்ளனர். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளனர்.
உலக நாடுகளின் தலைவர்களில் அதிக சம்பளம் பெறும் தலைவர் என்ற பெருமையை பரப்பளவில் சிறியதாக இருக்கும் சிங்கப்பூர் பெற்றுள்ளது.
இந்நாட்டின் பிரதமர் லீ சியான் லுாங்கின் ஆண்டு வருமானம் 11.2 கோடி ரூபா.
இதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உலகின் வல்லரசு நாடான அமெரி்க்க அதிபர் ஒபாமா உள்ளார். இவரது ஆண்டு வருமானம் 2.6 கோடி ரூபா.
மூன்றாவது இடத்தில் பிரான்ஸ் அதிபர் பிரான்காயிஸ் ஹொலன்டே உள்ளார். இவரது ஆண்டு வருமானம் 1.8 கோடி ரூபா.
4 ஆவது இடத்தில் உள்ள ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் ஆண்டு வருமானம் 1.5 கோடி ரூபா.
இவர்களுடன் ஒப்பிடுகையில், இலங்கை, இந்தியாவின் அரச தலைவர்களின் சம்பளங்கள் மிகக் குறைவே.